பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வேழப் படையையே அவனும் பெரிதும் விரும்புவன். அப்படை யுடைமையால், அவன் நாற்படை எப்போதும் வெற்றிக் கொடியேந்தியே உலாவரும்.

இமயவரம்பன் ஆ ற் ற ல் ஆண்மைகளில் மட்டுமே சிறந்தவன் என்று நினையன்மின். அன்பு அருள் ஆகிய அரும்பண்புகளும், அவனிடம் மிகப்பரந்த அளவில் பொருந்தியிருத்தன. மகளிர்க்கு அணியாவது, கணவன்மார் தம்பால் காட்டும் அன்பு ஒன்றே, அவ்வன்பு இமயவரம்பன்பால் குறைவறப் பெருகியிருந்தமையால், அப்பேறுபெற்ற, அவன் மனைவியால், ஏனைய:அழகுகள் எல்லாம், இயல்பாகவே வந்து குடிபுகுந்தன. அவள் இயற்கை அழகு காணும் இமையவர். தம் அழகிகளெல்லாம், இவள் அழகு என்னிடமே உளது; இல்லை, என்னிடமே உளது' எனத், தமக்குள்ளே பகைகொள்வர் என்ருல், அவள் அ ழ கி ன் பெருமையை என்னென்பது! அத்துணைப் பேரழகியான அவள், கருத்து நீண்ட கூந்தலின் ஒளியும் ஒளிகுன்றுமளவு, ஒளிவீசும் நவமணிகள் இழைத்த தலைக்கலனும், காதுமறையுமளவு ஒளிவீசும் குழையும் அணிந்து காட்சிதருவள். அவளை, இத்துணைப் பேரின்ப வ ா ழ் வி ல், வாழப்பண்ணுவது, இமயவரம்பன் அன்பே. வாழ்க உரிமை மகளிர்பால் அவ்வன்பு செலுத்தும் இமயவரம்பன்! தன் அரசவைவந்து தன்னைப் பாடிப்பரவும் பாணர்க்குள், பெண்டிர்பால் பேரருள் கொண்டு, அவர் விரும்பும் பரிசில்கள், பல அளித்து அனுப்புவன்.

இவ்வாறு வாழ்வாங்கு வாழும் இமயவரம்பனின் வளமார் வாழ்வைக்கண்டு மகிழ்ந்த புலவர், இவ்வளம், அவன் பிறந்த குடியின் பெருமையால் வந்தது. தம் அரச ஆணை இனிது செல்ல, தமிழகம் அனைத்திலும் தம் ஒருகுடையே நிழல் செய்ய, நெடிது ஆ ண் டு, நீள்புகழ்பெற்றவர், அவன்

54