பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை அயலில் உள்ள வேந்தர்கள் மீதெல்லாம் போர்தொடுத்துச்சென்று, தொல்லை தருவனுயின், அத்தகையான் மீது தன்னளவில் பகை இல்லையாயினும், அவன் போர் ஆணவத்தை அழித்து அடக்கிநிறுத்தவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், அவனே எ தி ர் த் து வெற்றி கொள்ளும் வீரன், தும்பைவீரன் என்றும், அவன் மேற்கொள்ளும்போர், தும்பைப்போர் என்றும் அழைக்கப்படும். , மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப' என்பது தொல்காப்பியம் (பொருள்: 70)

நெடுஞ்சேரலாதன், சென்று தாக்கும் அழிவுப்போர்புரிபவன் அல்லன். தம் ஆற்றல் ஆண்மைகளை நிலைகாட்ட, அரசுகள் மீதெல்லாம் சென்று தாக்கும் போர்வெறிகொண்டு திரிவாரை,வென்று துரத்தி அவர்க்குப் பாடம் புகட்டப் போர் மேற்கொண்டெழும், நல்லரசுகளையெல்லாம் பகையரசர். களாகக்கொள்ளும், ஆணவப் போர்புரிவான ம ட் டு ேம எதிர்த்துப்போரிட்டு அழிப்பன். ஆகவே, அவன் ஒரு நல்ல தும்பை மறவன் என்பதை வியந்து பாராட்டவே, புலவர் குமட்டுர்க் கண்ணனர். 'அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர், போர் பீடு அழித்த செருப்புகல் மறவ’, என்று பாடியுள்ளார்.

நிலம், நீர், நெருப்பு, விளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்களின், அளந்து அறிய மாட்டாப் பெருமையினையும், பொறை, அளி, அ ழி வா ற் ற ல், வண்மை அளந்து காணலாகப்பரப்பு, ஆகிய இயல்புகளையும், பேரரசர்களுக்கு ஏற்றிப் பாராட்டுவது புலவர், பண்பாடு என்பதை

'மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்.

58