பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைபடுபொருள்கள், வானளாவும் குவியல்களாக ஆங்காங்கே கொட்டிக்கிடந்தன. நெல்லும் சரும்பும், கொள்ளும் வரகும். போலும் உணவுப்பொருள்கள் வானளாவும் குவியல்களாக ஆங்காங்கே கொட்டிக்கிடந்தன. இவையன்றி, இந்நாட்டு மக்கள் காணுத நவநவமான வெளிநாட்டுப் பொருள்கள் வனப்புற வரிசை செய்யப் பெற்றிருந்தன. காட்சி நலம் இவ்வாறிருக்க, மன்னன் பிறந்த நாள், மணிமுடி சூடியநாள் மாற்ருரை வெற்றிகொண்டநாள், மணநாள் என எடுக்கும் விழாக்கள் குறித்து எழும் முரசொலி, காததிர முழங்கிக்கொண்டிருக்க, மேலே கூறியன குறித்து எடுத்த கொடிகளோடு, இன்னின்ன பொருள்கள் இன்னின்ன இடங்களில் விற்கப்பெறும் என்பதை உணர்த்த எடுத்த கொடிகளும் வானளாவப் பறந்துகொண்டிருந்தன. "வேந்தன் பெற்ற வெற்றித் திருநாள் இன்று: மக்காள் அந்நாளை மகிழ்ந்து கொண்டாடுங்கள்’’ என்றும், 'வேந்தன் வரையாது வழங்க வாயிற்கண் உள்ளான்; வாங்கும் விருப்புடையார் வருக வருக’’ என்றும், வீரர்கள் வணிக வீதிகளில் முரசறைந்து அறிவிக்கக்கேட்டு அரண்மனை வாயிலை அடைந்தார் புலவர்.

ஆங்கு, இமயவரம்பன், தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது, தன்பால் உள்ளது அனைத்தையும் வருவார் அனைவர்க்கும் வழங்கும் வன்மைச் சிறப்பையும், அவன் அளிக்கும் பரிசில் பெற்று மீ ள் வார் ஒவ்வொருவரும், :இமயவரம்பன் செல்வம், எங்கள் செல்வம்: எங்களுக்கே உரிய ஒப்புயர்வற்ற விழுநிதி அவ்வேந்தன்; வாழ்க அவ்வேந்து!’ என வாழ்த்திச் செல்வத்தையும் கண்டார். இவ்வாறு நாடெலாம் போற்றக், கேடிலா வாழ்வளிக்கும் அவ்வேந்தனைக்காண, அவன் இருக்கும் திசையை நோக்கியபோது, அவன் அருகே, அணியாக இட்ட பொற்ருெடிகளும் சிதைந்து போகும் வண்ணம், பகைவர் கோட்டைக் கதவுகளைக்

62