பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

20

25

30

35

கொடி விடு குருஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்கின் உருவு அறக் கெடுத்துத், தொல்கவின் அழிந்த கண் அகல் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் பீர் இவர்பு, பரந்த, நீர் அறு நிறைமுதல் சிவந்த காந்தள் முதல் சிதை மூதில் புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும் புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் அறியாமையான் மறந்து து ப்யெதிர்ந்த நின் பகைவர் நாடும் கண்டு வந்திசினே, கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னட்டு விழவு அறுபு அறியா முழவு இமிழ் முதுர்க் கொடி நிழல் பட்ட பொன்னுடை நியமத்துச் சீர்பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின் போர்வல் யானைச் சேரலாத நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு என உண்டு உரை மாறிய மழலை நாவின் மென் சொல்கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த வெய்துறவு அறியாதுநந்திய வாழ்க்கைச் - செய்த மேவல் அமர்ந்த சுற்றமொடு, ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கை என்றும் பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின் நீ புறந்தருதலின் நோய் இகழ்ந்து ஒரீஇய யாணர் நன்னாடும் கண்டு மதி மருண்டனென்; 'மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது

66