பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈத்துக் கைதண்டாக் கைகடுந் துப்பின் புரைவயின் புரைவயின் பெரிய நல்கி ஏமமாகிய சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை 40 ஓடியா மைந்த நின் பண்புபல நய்ந்தே."

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிரைய வெள்ளம் சேரலாத (16-23) பகைவர் நாடும் கண்டு வந்திசின் (1-15) யாணர் நன்குடும் கண்டு (24-34) நின் பண்புபல நயந்து (35, 40) மதிமருண்டனென் (34) என முடிக்க,

கடலவும்=முத்தும் பவழமும்போலும் கடல் படுசெல்வமும். கல்லவும் = பொன்னும் மணியும், போலும் ம&லபடு செல்வமும். யாற்றம்=ஆறுபாயும் மருதமும் முல்லையும் ஆகிய நாட்டில் உளவாகும் பல்வகை உணவுப் பொருள்களும். பிறவும், பிறவெளி நாட்டுப் பொருள்களும் ஆகிய வளம்பல நிகழ்தரும்=பலவளமும் நிறைந்த=நனந்தலை நன்னாட்டு. அகன்ற நல்ல நாட்டில் உள்ள விழவு அறுபு அறியா= திருவிழா நிகழாத நாட்களை அறியாச் சிறப்பு வாய்ந்த, மூழவு இமிழ் மூதூர்=முரசு முழங்கும் மூதூர்களில், கொடி நிழல்பட்ட=பல்வேறுவகைக் கொடிகளால் நிழல் பெற்ற, பொன். னுடை நியமத்து=பொன்வளம் மிக்க வணிக வீதிகளில், சீர் பெறு கலிமகிழ்=சிறப்பு வாய்ந்த வெற்றி விழாக்களையும் கொடைவிழாக்களையும். இயம்பும் முரசின்=நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் முரசினை முழக்கவல்லோராகிய, வயவர் வேந்தே = வீரர்களின் வேந்தே. பரிசிலர் வெறுக்கை=பரிசிலர்களின் செல்வம் போன்றவளே. தார் அணிந்து எழிலிய=மாலை அணிந்து அழகு பெற்ற தொடி சிதை மருப்பின்-போரில்

67