பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைந்த தொடியணிந்த கோடுகளைக்கொண்ட போர் வல் யானைச் சேரல்ாத=போரில் வல்ல யானைப்படையுடைய சேரலாதனே. ய | ண் டு தலைப்பெயர - பகைப்புலத்தில் தங்குதற் உரிய ஓராண்டு காலமும் கழிந்து போகவும். வேண்டு புலத்து இறுத்து - அழிக்க வேண்டிய பகைநாட்டில் தங்கியிருந்து. முனைஎரி பரப்பிய துன்னரும் சீற்றமொடு=போர் முனைக்கண் உள்ள ஊர்களில் எரியூட்டற்பொருட்டு பகை. வரால் அணுகுதற்கரிய சினத்தொடு. மழை தவழ்பு தலைஇயமதில் மரம் மு. ரு க் கி=மழைமேகம் தங்குமளவு உயர்ந்த மதில்களையும், காவற்காடுகளையும் அழித்து. நிரைகளிறு, ஒழுகிய=வரிசை வரிசையாகக் களிறுகள் செல்லும். நிரைய வெள்ளம்=பகைவர்க்கு நரகத்துன்பம் போலும் கடுந்துன்பம் தரவல்ல, வெள்ளம் போன்ற பெரியபடை, பரந்து - பரந்து

சென்று. ஆடுகழங்கு அழி மன்மருங்கு அறுப்ப= கழற்சிக்காய் இட்டு எண்ணியவழியும் எண்ணுமுறை மறந்துபோகும்

பேரெண் அளவானதும். அரணகத்து அரசர்க்கு உரிமை. யுடையதுமாகிய படையை அழிக்க. கொடிவிடு குருஉப்புகை= கொடிகொடியாக எழுந்த கரும்புகை. பிசிர=பிசிர் பிசிராகச் சிதறுமாறு. கால்பொர=காற்று விரைந்துவீச. அழல்கவர் மருங்கின்=நெருப்பால் அழிவுற்ற இடங்களைப்போல உருவு அறக்கெடுத்து அறவே உருக்குலைந்து போகுமாறு, அழிக்கவே. தொல்கவின் அழிந்த=தம்பண்டை அழகு அழிந்துபோன, கண் அகன் வைப்பின்=இடம் அகன்ற ஊர்களையும். வெண்பூ வேளையொடு=வெள்ளிய பூக்களைஉடைய வேளைக்கொடி யோடு. பைஞ்சுரை கலித்து=பசிய சுரைக்கொடி தழைத்து வளர, பீர் இவர்பு பரந்த=பீர்க்கங்கொடி ஏறிப்படர்ந்த,

நீர் அறு=நீர் அற்றமையால். நிறைமுதல் உழுசால்களில் சிவந்த காந்தள்=பகுத்த அடிவாடிச் சிவந்த காந்தட்செடிகளே யுடைய. முதல் சிதை=அடித்தளம் தகர்ந்துபோக. மூதில் =பழைய வீடுகள். புல்வுவில் உழவின்=புலால் நாறும் வில்

68