பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. துயில் இன்பாயல்

இமயவரம்பனைப்பாடிப் பாராட்டிப் பரிசில் பெற்றுப் போக வேண்டும் என்ற விருப்பம் ஒன்றே காரணமாகச், சேரர் அரண்மனைக்குள் அடியிட்டார் என்ருலும், புலவர் தம் புலமைச் சிறப்பு, அவர்க்கு அரண்மனையில் உயர்ந்த ஒடரிம் அளித்து விட்டது. அரண்மனையில் உள்ளார் அனைவரும் அவர்பால் அன்பு செலுத்தலாயினர். பிரிந்து போகவிடாது பற்றிக் கொண்டது அவர்தம் அன்பு. அதனால் ஆண்டே வாழ வேண்டியதாயிற்று. அவ்வுரிமையால் அ ர ண் ம ன யி ல் உள்ளார் ஒவ்வொருவரைப் பற்றியும், ஆங்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

அரசமாதேவி, கணவன் கற்பித்த நெறியில் கலங்காது நிற்பதே அறமாம் என அறிந்து ஒழுகும் அறக்கற்புடையவள். அழகு அறிவு ஆகிய அருங்குணங்களைக் குறைவறக் கொண்டிருந்தும், அதனால் செருக்குருது பணிந்தொழுகும் பேரழகுடையவள். கணவன்பால் காணலாகும் குறைகண்டு, ஊடி நிற்கும் காலத்தில், புறத்தே ஊடல் உணர்ச்சியுடையாள் போல் காணப்படினும், அகத்தே அளக்கலாகா அன்புடையவள் என்பதை அறிவிக்கும் புன்முறுவல் காட்டும் முகப் பொலிவுடையாள். அமிர்தம்போல் இனிக்கும் அச்சொற். களே குடிகொண்டிருக்கும் வாயுடையாள். கணவனையும் கணவனோடு வரும் விருந்தினரையும் விரும்பி வரவேற்கும் மனவேட்கையைப் புலப்படுத்தும் அருள் நோக்குடையாள். மனத்து மகிழ்ச்சியை மக்களுக்குக் காட்டும் மலர்ந்த முகமுடை

7]