பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாள் மலர்க்கொம்பு நடைகற்பதுபோலும், நடையழகுடை. யாள் என்று, அரசமாதேவியின் அகப்புற அழகுகள் அனைத்தையும் அளந்து அறிந்திருந்தார்

அம்மட்டோ, மன்னன் மனையின்கண் தங்கியிருப்பாளாயின் அரசமாதேவியார், தன்கண் இழைக்கும் நவமணிகளின் ஒளியோடு போட்டியிட்டு ஒளிவீசுமாறு உருக்குற்று வலி, யிழந்து போனதால், புத்தொளிவீசும் பொன்னால் பண்ணப் பெற்ற ஆரங்களும், விளக்கமுறக்காட்டும் பேரொளி வாய்ந்த வைர மாலைகளும் ஒன்ருேடொன்று மாறுபட்டு ஒளிவீசும்படி: அணிந்துகொண்டு, பேரசர்களின் மணிமுடிகளை அழித்துப் பண்ணிய பொன்னாரம் விளங்கும் கணவன் மார்பில், வெற்றுத்திருமகள் வீற்றிருப்பதைக் கண்டும், அவனோடு, புலந்து கொள்ளாது, வெற்றித்திருமகளை மார்பில் மகழ்ந்: தேற்றுக் கொள்வது, ஆண்மைமிகு அடலேறனேயர்க்கு அழகு என அறிந்து, அறிவுடையளாய் அம்மார்பில் தன்கண் புதைத்து உறங் கும் பேரின்பவாழ்வால் பெருமிதம் கொள்வாள். இவ்வாறு வினையொழிந்து மனையின்கண் இருப் புழி, தன்மார்பை மனைக்கிழத்திக்கே உரிமையாக்கிக் கொடுத்துவிடும் அரசன் வினைமேற்செல்ல நேர்ந்ததும் அம் மார்பை அவளிடமிருந்து கவர்ந்து கொள்ளத் தயங்கான். அவளே நெடிதுநாள் தனித்திருக் கவிடுத்துப், பிரிந்து போய் விடுவன் என்பது போலும் உண்மைகளையும் உணர்ந்:

திருந்தார்.

இமயவரம்பன், காதலையும் கடமையும் ஒருசேர மதிப்பவன் என்ற புலவர் மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்ச்சி, புலவர் ஆங்கிருக்கும் போதே நிகழ்ந்து விட்டது. பற்றற்கரிய பேரரண் தன்பால் உளது என்ற பெருமையால் ஓர் அரசன், இமயவரம்பனைப் பகைத்துக் கொண்டான். அது

7

2