பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருத இமயவரம்பன், அவன்மீது போர் தொடுத்துப் போய்விட்டான். போய்ப்பார்த்தபோது, அக்கோட்டை உண்மையிலேயே அழிக்கலாகா அமைப்புடையது என்பது புலனாயிற்று. -

மலைச்சிகரங்களோடு மாறுபடும் உயர்வுடையதாய் வளைந்து வளைந்து கட்டப்பெற்ற புறமதில், தன்னகத்தே ஒரு பெரிய நாட்டையே அ ட க் கி க் கொண்டதுபோலும் அகத்திடம், அம்புக்கட்டு முதலாம் அரிய போர்ப்பொறிகள் பொருத்தப்பெற்ற இடைமதில் அகத்தே அரணாக சார்த்தி வைக்கப்பெறும் களைய மரங்கள்பல பெற்று புறவாயிலின் மேற்புறத்துப் பாவு கல்லில் கட்டப்பெற்று, அணுகுவார் தலையைப் பற்றித் திருகித் தூக்கிக் கொள்ளும் ஐயவித்துலாம் எனும் பொறியமைந்த நெடியபெரிய கதவுகள் ஆகிய இவ்வுறுப்பெலாம் அமைய ஆக்கப்பெற்றிருந்தது அவ்வரண். இத்தகைய ேப ர ர னை அழிக்கவேண்டி நேர்ந்தமையால், இமயவரம்பன் தான் கருதி வந்தநாளைக் காட்டிலும் அதிக நாள் தங்கவேண்டி இருந்தது. உறுதியும் திண்மையும் வாய்ந்த அவ்வரனே அழிக்க, இமயவரம்பன் தன்பெரிய யானைப்படையைப் பணிகொண்டான். மதம் மிகுந்து, மாளாச் சினங்கொண்டு மரங்களை மளமளவென முறித்துத் தள்ளவல்ல, ஆற்றலும் இளமையும் வாய்ந்த அவன் களிறுகள் அரண் கதவுகளைத் தம் கோடுகளால் தம்மால் ஆகும்வரைத் தாக்கித் தாக்கிச், சிதைத்துத் திறந்துவிட்டன. கோட்டைக் கதவுகள் பயனற்றுப்போகவே, இமயவரம்பன் கருதிவந்த காரியம் எளிதாக முடிந்து விட்டது. அரணுக்குரிய அரசனை வெற்றி கொண்டு விட்டான். மேற்கொண்டுவந்த வினை இனிதே முடிந்து வி ட் ட த ா க வு ம், வேந்தன் வீடுதிரும்பக் கருதினானல்லன். ஓராண்டு காலமாக ஓயாப்போர் புரிந்து வந்த தன்படை, மிகவும் தளர்ந்துபோயிருக்கும் நிலையில்,

73