பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரம்கொல் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை ஆகலின் காண்டு வந்திசினே; 10 ஆறிய கற்பின் அடங்கிய சாயல்

ஊடினும் இனிய கூறும் இன்நகை அமிர்து பொதி துவர்வாய் அமர்ந்த நோக்கின் சுர்டதுதல் அசைநடை உள்ளலும் உரியள்; பாயல் உய்யுமோ? தோன்றல்! தாவின்று 15 திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்

வயங்குகதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர எழுமுடி கெழ்இய திருளுெமர் அகலத்துப் புரையோர் உண்கண் துயில் இன்பாய்ல் பாலும்கொளாலும் வல்லோய் நின் 20 சாயல் மார்பு நனி அலைத்தன்றே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் துரக்கு : செந்துக்கு பெயர் : துயில் இன்பாயல்

தோன்றல், (14) வல்லோய், (14-19) பாசறை நீடினை ஆதலின் காண்கு வந்திசின் (1.9) மார்பு அலைத்தன்று (20) அசைநடை, உ ள் ள லு ம் உரியள், பாயல் உய்யுமோ? (10-14) என முடிக்க. -

தோன்றல்-தலைவனே, தாவின்று=உருக்குற்று உரம் இழந்தமையால். திருமணி பொருத=அழகிய மாணிக்கமணி. களோடு போட்டியிட்டு ஒளிவீசும். திகழ்விடு பசும்பொன்= பேரொளிகாலும் பொன்னாலான ஆரம். வயங்கு கதிர் வயிரமொடு உறழ்ந்து சுடர்வர=விளங்கும் ஒளிக்க கதிர்களைக்

76