பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு வயிரமாலேயோடு மாறுபட்டு ஒளிவீசுமாறு அணிந்து. புரையோர்-அரசமாதேவியார். எழுமுடிகெழீஇய = ஏழரசர்களின் முடிப்பொன்னாலான அணிவிளங்கும். திருளுெம அகலத்து=வெற்றித் திருமகள் வீற்றிருக்கும் உன் அகன்ற மார்பாகிய. உண்கண் துயில்=மையுண்ட தம்கண்களைப் புதைத்து உறங்குவதற்குரிய, இன்பாயல்= இனிய பள்ளியை. பாலும்=உடன் உறை காலத்தில் அவர்க்குப் பகிர்ந்து கொடுக்கவும். கொளாலும்=வினை கருதிப் பிரிந்துறையும் கால த் தி ல் அவரிடத்தினின்றும் கவர்ந்து கொள்ளவும். வல்லோய்=வல்லவனே! கோடு உறழ்ந்து எடுத்த-மலேமுடியோடு மாறுபடும் உயர்வுடையதாக எடுத்த, கொடுங்கண் இஞ்சி வளைந்த இடத்தையுடைய புறமதிலும். நாடு கண்டன்ன = பரந்து அகன்ற நாட்டைக் கண்டாற். போலும் இடத்தை பரந்த அகத்தே கொண்ட, கணை துஞ்சு விலங்கல்=அம்புக்கட்டு முதலாம் பொறியமைந்த இடைமதிலும்,துஞ் சு மரக்குழாம் துவன்றி = காவலாகக் கிடக்கும் கணைய ம ரங்க ள் மிகுந்து. புனிற்றுமகள் பூணுயவி = கருவுயிர்த்த இளம் மகளிர் காவலாக அரைத்துப் பூசிக்கொள்ளும் ஐயவியாகிய வெண்சிறு கடுகைக் குறிக்காத ஐயவி என்ற பெயர் பூண்ட ஐயவித்துலாம் என்ற பொறி. தூக்கிய மதில=தொங்கவிடப்பெற்ற, மதிலில் அமைந்து கிடக்கும். நல் எழில் நெடும் புதவு = நல்ல அழகிய பெரிய கதவுகளே. முருக்கிக் கொல்லுபு - தாக்கி அழித்ததால். நுனை முரி மருப்பின்=நுனி முரிந்துபோன கோடுகளையுடையவாகி. ஏனம் ஆகிய=பன்றிபோல் காட்சி தருவனவாகிய=கடாஅம் வார்ந்து=மதநீர் ஒழுகி. கடுஞ்சினம் பொத்தி=கடுஞ்சினங்கொண்டு. மரங்கொல்=காவற்காட்டு மரங்களையும் கணைய மரங்களையும் அ ழி க்கு ம். மழகளிறு = இளங்கன்றுகள். - முழங்கும் பாசறை=முழங்கும் பாசறையில். நீடினே ஆதலின் = நெடிது தங்கி விட்டாய். ஆதலின், காண்கு வந்திசின்=

77