பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணவந்துள்ளேன். நின்சாயல் மார்பு= மென்மைத்தன்மையமைந்த உன்மார்பு. நனி அளித்தன்று= உன் தேவியாரை

மிகவும் வருத்துகின்றது. ஆறிய கற்பின்=அறக்கற்பும். அடங்கிய சாயல்=அடக்கம் மிக்க அழகும். ஊடினும் இனிய கூறும்=ஊடிய காலத்தும் இன்மொழியே பகரும். இன்நகை = இனிய புன்முறுவலும். அமிர்து பொதிதுவர்வாய் -

அமிர்தம் போலும் இனிய சொற்கள் வெளிப்படும் வாயும். அமர்த்த நோக்கின் = வேட்கை புலப்படுத்தும் கண்களும். சுடர்நுதல் = ஒளிவீசும் நெற்றியும், அசைநடை = மலர்க்

கொம்பின் அசைவுபோலும் ந ைட யு ம் உடைய உன் தேவியார். உள்ளலும் உரியள்=காலம் நீட்டித்தனையாதலின் நினைத்து வருந்ததற்கும் உரியள். பாயல் உய்யுமோ = நின்மார்பிற்கிடந்து உறங்கியவள், பாயற்கண்படுத்து தனித்து உறங்க நேரின் உயிர்கொண்டு வாழ்வளோ?

வாழாள்; ஆகவே அவளைக்காண விரைக. எ று.

'யான் குறித்த நாளளவும் ஆற்றியிருக்க’ என்ற நின் ஏவல் பூண்டு, நின்னை உள்ளாதிருத்தலே யன்றி, நீ குறித்த நாளுக்கு மேலே நீட்டித்தாயாதலின், நின்னை நினைத்து வருந்துதலும் உரியள் என்பார், உள்ளலும் உரியள் என்ருர் என்ற பழைய உரை பாராட்டிற்கு உரியது.

கணவன் மார்பைத் துயிலுதற்கினிய பாயலாகக் கொண்டு மகிழ்வர் மகளிர் என்பதை, நாடன் மலர்ந்த மார்பிற்பாயல் துஞ்சிய வெய்யோள்' என்ற ஐங்குறுநூற்றுச் செய்யுளும் (205) உணர்த்துவது காண்க,

78