பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வலம்படு வியன்பனை

ஒரு பெரிய வீரனுக்கு ஆண்மையாவது, போர்க்களம் புக்கக்கால், பகைவர்மீது சிறிதும் இரக்கம் காட்டாது அறவே அழித்து ஒழித்தலாகும். ஆல்ை, அவ்வாண்மைக்கு மேலும் ஆக்கம் அளிப்பது, பகைவனும், பகைவன் நாட்டு மக்களும் கேடுற்றவிடத்து, யாவரினும் விரைந்து முன்னோடித் துணை' புரிதலாகும். பே ர | ண் ைம என்ப தறுகண், ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு என்ருர்' வள்ளுவர். வள்ளுவர் வகுத்த இவ்விதியைப் பிழையறப் போற்றிக் காப்பவன் இமயவரம்பன் என்பதை, அவைேடு சில காலம் இருந்து பழகியதும் கண்டு கொண்டார் புலவர் குமட்டுர்க் கண்ணளுர்,

இமயவரம்பன் கடம்பரோடு நிகழ்த்திய போர்க்கொடுமை கூறுதிறம் உடையதன்று. கடம்பர், பெருங்கடல் இடையே இருந்த தீவுகளையே தங்கள் வாழிடமாகக் கொண்டிருந்தனர். அவ்வாருகவும் க - ல் க ண் டு கலங்கி விட்டானல்லன் இமயவரம்பன். கடலைப்பிளந்து கொண்டு கலங்கள் செல்லும் விரைவால், கடல்நீர் மலைபோலும் அலைகளாக எழுந்து, சிறுசிறு துவலைகளாகச் சிதறுண்டு போயிற்று. அவ்வாறு கடலைக்கடந்து கடம்பர் தீவுகளை அடைந்து அவர்களை வெற்றிகொண்ட இமயவரம்பன், அவர்களை அம்மட்டோடு விட்டானல்லன். அவர்கள், தங்கள் உயிரினும் சிறந்ததாக ஒம்பிவந்த குலமரமாம், கடம்ப மரத்தை .ெ வ ட் டி வீழ்த்தினான். அந்நிலையிலும் அவன் சினம் அடங்கினானல்லன். வெட் டி வீழ்த்திய கடம்பை, அக்கடம்பர்பாலே விட்டுவராது, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கினான். அத் துண்டுகளைப் போர், முரசரகவும் மாற்றி முழக்கினான்.

79