பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயவரம்பன் ஆற்றிய போர்கண்டே கலங்கி அழிந்த பகைவர், அம் முரசொலி கேட்டு, மேலும் நடுங்கலாயினர். தங்கள் குலமரமாய் நின்று, தங்கட்டுக் குறைவிலா இன்பம் கொடுத்து வந்த கடம்பே, தங்கள் காது வெறுக்கும் கடுவொலி எழுப்பக்கண்டு, கடம்பர் கலங்கிக் கண்ணிர் சொரிந்தார்கள். களம் புகுந்த காவலன், ஆங்கு அத்துணைக் கொடியனாய்க் காட்சி அளித்தான்.

போர் ஒழிந்து விட்டது. இமயவரம்பன் சினமும் மறைந்து விட்டது. அரசிழந்த நாட்டவரின் அல்லல் எத்துணைக் கொடிதாமோ? என்ற எண்ணம் எழுந்தவுடனோ அருள் சுரந்தது. மன்னன் மனநிலையை அறிந்தார்கள் அவன் படையாளர். வெற்றி பெற்ற மகிழ்ச்சியால் வீரத்திரு நடனம் புரிந்து கொண்டிருந்த அவ்வீரர்கள், அதை கைவிட்டார்கள். அவர்கள் மனமும் திருந்தி விட்டது. பகைவன் நாட்டுக் காவல் மரத்தால் ஆனது என்ற நினைப்பால், அம்முரசைச் சிறிது இகழ்ச்சிக் குறிப்போடு பார்ப்பதை விடுத்து, கொடை முரசிற்கு உரிய மதிப்பளிக்கலாயினர், பலிதுவி வழிபடவும் தொடங்கினர்கள். பகைவர்க்கு அச்சம் ஊட்ட அடிப்பதை விடுத்து, அஞ்சி அல்லல் உற்ருர்க்கு, அடைக்கலம் அளிக்க அடிக்கத் தொடங்கி 'அரசிழந்து போனமையால் வாழிடம் தேடித் திக்கெலாம் அலைந்து திரியும் மக்கள்.காள்! இது கேண் மின்; எம்நாட்டு வேந்தன், வெண்கொற்றக்குடை வானளாவ உயர்ந்து விளங்குவது காண்மின்; வானம், கடுங்காற்றுச் சுழன்றடிக்கும் கொடுமையுடையது என்ருலும், உலகிற்கு ஒளியளித்து உதவும் ஞாயிறும், விண்ணவர் உயிர் போற்றும் அமிழ்தம்போல் மண்ணவர் உயிர் போற்றும் மழைமேகமும் தவழும் மாண்புடையதும் ஆம், அவ்வானத்தின் இயல்பு. அவ்வானளாவ உயர்ந்து, நிழல்அளிக்கும் எம் வெண் கொற்றக் குடைக்கும் உண்டு. பகைத்தாரைக் கொடுமைக்கு

80