பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளாக்கினும், வாழும் நிலையற்றவரை வாழ்விக்கும் வற்றப் பேரருளும் அக்குடைக்குரியோளுகிய, எம் வேந்தன்பால் உளது. ஆகவே, வாழிடம்தேடி, விழிநீர் சோர வாடும் மக்காள் வருக எம் குடை நிழற்கீழ்; வாழ்வு பெறுமின் எம் வளநாட்டில், எனக் கூவிக் கூவி அழைக்கலாயினர்.

இமயவரம்பனின் இவ்விருவேறுபட்ட இயல்புகளையும் கண்ணுற்ற புலவரால், இமயவரம்பனைப் பாராட்டாமல் இ ரு க் க முடியவில்லை. இமயவரம்ப ! உன் பகைவர் பொறுக்கலாகாப் பெரும் பிழை புரிந்தாராயினும், பின்னர்த் தம்பிழை உணர்ந்து வந்து பணிந்து திறமையாக வளம்பல தருவராயின், அவர் பிழை பொறுத்து, அவரைஆட்கொள்ளும், உன்னைக் காட்டிலும் உயர்ந்தவரோ, அல்லது உன்னை ஒப்பவரோ, இவ்வுலகில் ஒருவரும் இலர். அவ்வியல்பால் ஒப்புயர்வற்று வி ள ங் கு ம் உரவோய் நீ வாழி! என வாழ்த்தினர்,

போர் புரிந்து அழிவு பல கண்ட பிறகே அடையலாகும் வெற்றியை, பகைவர் தன் ஒலி கேட்டு நடுங்கும் வகையில் முழுங்குவதினலேயே, பெற்றுத்தரவல்ல முரசு, என்ற பெருமை தோன்ற வந்த, வலம்படுவியன் பனை என் தொடரினாலேயே இப்பாட்டிற்குப் பெயர் சூட்டியுள்ளார்கள்.

17. 'புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே

பெரிய தப்புநராயினும் பகைவர் பணிந்து திறைபகரக் கொள்ளுநை ஆதலின் துளங்கு பிசிர் உடைய மாக்கடல் நீக்கிக் 5 கடம்பு அறுத்து இயற்றிய வலம்படுவியன் பன

ஆடுதர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறு உம் தொடித்தோள் இயவர்

-6- 81