பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைந்த, நனந்தலைப்பைஞ்ஞீலம் = விரிந்த இடத்தை உடைய வளமான நிலத்தில்வாழும் மக்காள்! வருக இந்நிழல் என = வாருங்கள் இக்குடைநிழற்கீழ் என்று கூறுமாறு, ஞாயிறு புகன்றதீதுதிர் சிறப்பின் = ஞாயிறு உலாவர விரும்பும் குற்ற மற்ற சிறப்பினையும், அமிழ்து திகழ் கருவிய கணமழை தலைஇய= நீரால் நிறைந்து இடி மின்னலோடுகூடிய பெரும்மழை மேகம் பரவப்பெற்று. கடுங்கால் கொட்கும் =கொடிய சுழற்காற்று சுழன்று அடிக்கும். நன்பெரும் பரப்பின் = நன்மை மிக்க பெரிய பரப்பினையும் உடைய, விசும்பு தோய் வெண். குடை = வானளாவ உயர்ந்த வெண்கொற்றகுடை. நுவலும்= கூருமல் கூறும். பசும்பூண் மார்பு = புதிய புதிய பூணாரம் பூண்ட மார்பனே! பாடினி வேந்தே! - பாணர் மனைவியர்க்குப் பரிசு பல அளிக்கும் பேரரசனே! பகைவர் பெரிய தப்புநராயினும் = பகையரவர்கள் பெரிய பிழை புரிந்தனர் என்ருலும், பணிந்து திறைபகர = பணிந்து வந்து தாமே திறையளிக்க முன் வந்தால். கொள்ளுநை ஆதலின் - அத்திறை கொண்டு அருள்புரிவை ஆதலின், புரைவுது நினைப்பின் உன்பண்பாட்டுப் பெருமைக்கு ஒப்பாகக்கூடியது எதுஎன ஆராயின், புரைவதோ - இன்று. ஒப்பாவது ஒன்றும் g6ుడిు. - -

கடம்பரை வென்று அவர் காவல் மரமாம் கடம்பை வெட்டி அம்மரத்துண்டால் மு ர சு ெச ய் து முழக்கும் சேரலாதன் செயலைச்,

சேரலாதன்

மால்கடல் ஒட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய

பண்ணமை முரசு’

'சேரலாதன்

முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து’ -அகம்: 127 : 341 எனப் புலவர் மாமூலனாரும் பாராட்டியுள்ளார்.

83