பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கூந்தல் விறலியர்

வறியோர்க்குப் பொருள் வழங்கும் வள்ளல்கள், தம்மிடம் வந்து பொருள் வேண்டிநிற்பார்க்குக் கொடுத்த பொருள் போதாமையால் அவர்கள், மறுபடியும் வேறு ஒருவர்பால் சென்று பொருள் வேண்டி நிற்காதபடி நிறைய அளித்தல் வேண்டும். அதுவே விழுமிய கொடைவளம். அத்தகு கொடைக்குணம் நற்குடிப்பிறந்தாரிடமட்டுமே குடிகொண்டிருக்கும். 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள’ என்ருர் வள்ளுவர்.

வள்ளுவர் காணத்துடித்த வள்ளலைக் காட்டிலும், சிறந்த வள்ளலாய் வாழ்ந்திருந்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன்பால் வந்து, அவன் வழங்கும் பொருள் பெற்றுச் செல்பவர், மீண்டும் பொருள் வேண்டிப் பிறரிடம் செல்லும் புண்கண்மை இலராதல் மட்டுமன்று; கொள் எனக் கொடுக்கும் கொடைகுணத்தைத், தாமும் பெறுமளவு உயர்ந்து விடுவர். அத்தனைப்பெரும் பொருளை இமயவரம்பன் பரிசளிப்பான். இமயவரம்பன்பால் பொருந்தி யிருந்த குன்றத்தனைய இக்குணத்தை, உலகோர்க்கு உணர்த்த, புலவர் மேற்கொண்ட புதுவழி, வியப்பூட்டும் பேரின்பம் வாய்ந்துளது.

இமயவரம்பன்பால் பொருள்பெற்று, வறுமை தீர்ந்தவர், தாம்பெற்று வந்ததில் ஒரு பகுதியைப், பிறர்க்கும் வழங்குவர் என்ருே, இமயவரம்பன்பால் பரிசில் பெற்ற இன்னபுலவர், அப்பொருளை இன்னார்க்கு வழங்குவதும் செய்தார் என்றோ கூறி, இமயவரம்பன் கொடை வளத்தைச் சொல்லால் விளக்க

84