பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவிட்டு, மாரி பொய்க்கினும் - மழையைப் பெய்யாது பொய்த்தாலும் சேரலாதன் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். பின்னும் நசை பொய்யலன் = பின்னும் பின்னும் சென்ருலும் விரும்பிச்சென்றதை வழங்காது விடுவானல்லன் வழங்குவன். 'உண்மின் கள்ளே, அடுமின் சோறே என ஆணையிடும் புலவர் குமட்டுர்க் கண்ணனர் செயல், குமணன்பால் கொடைவளம் பெற்றுத் திரும்பிய புலவர் பெருஞ்சித்தரனார் தன் மனையாளுக்கு.

' நின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் பள்ண்மான் கற்பின் நின்கிளை முதலோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிரிப்பை நல்கியோர்க்கும் இன்னேர்க்கும் என்னாது என்னோடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடு மதி மனைகிழவோயே!

-புறம் : 163

என இடும் ஆணையையும்

பிட்டங் கொற்றனப் பாடிப் பரிசில் பெற்ற புலவர் படமவண்ணக்கன் தாமோதரனார்.

'ஏற்றுக உலேயே ஆக்கே சோறே கள்ளும் குறைபடல் ஒம்புக ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக அன்னவை பிறவும் செய்க, -

-புறம் : 172 என இடும் ஆணையையும் நினைவூட்டுவது காண்க.

89