பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரை யார் துடைப்பர்? பாவெல்லாம் படையாக்கிப் பகைமை யோட்டும் பாவேந்தே எங்குலத்தின் தலைவா இன்று நாவெல்லாம் புலர்ந்திருக்க விழிநீர் சிந்த நாடெல்லாங் கவிவாணர் திகைத்து நிற்கக் கோவென்று வாய்ப்புலம்பக் கையற் றேங்கக் கொற்றவனே கற்றவனே மறைந்தாவிட்டாய் ! சாவொன்றும் புதுவதன்று தெரியும்; ஆனால் தமிழன்னை கண்ணிரை யார்து டைப்பார்? கவிஞரெனப் பேர்படைத்த எங்கட் கெல்லாம் காவலன்யார்செந்தமிழ்க்குத் தீங்கு செய்யப் புவியிலெவர் நினைத்திடினுங் கனன்றெ ழுந்து புலிப்போத்தாய்த் தனை மறந்து தமிழ்நி னைந்து கவிபொழிய வல்லான்யார்? இனிமேலிங்குக் # கவிதைக்குப் பரம்பரையைப் படைப்போன் யார்யார்? இவையெல்லாம் நினையுங்கா லுணர்வு விஞ்சி இறப்பென்னும் ஒருபாவி தொலைக என்போம்.