பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் கவியரசர் முடியரசண் உள்ளத் துள் எல்லாமவ் வோவியத்தின் நல்லுருவே பற்றிப் படர்ந்தென்னைப் பாசத்தாற் கட்டுறுத்திச் சுற்றி வளைத்துள்ளம் சொக்கிவிடச் செய்ததுகாண்; செக்கச் சிவந்திருக்கு செவ்விதழின் வாய்மலர்ந்து ஞ் பொக்கைச் சிரிப்பொன்று பூத்திருக்கும் அம்முகத்தில்; விஞ்ஞானம் மேலோங்கி வீறிட் டெழும் நேரத் திஞ்ஞாலம் நான்பிறந்தேன் என்னுங் கருத்தோடு விண்ணிற் சிறகடித்து வெட்ட வெளிபறக்க எண்ணிக் குதிக்க எழுவான்போற் கைகால்கள் ஆட்டிப் படைக்கும் அழகெல்லா மென்மனத்தை ஆட்டிப் படைத்தனகாண்; ஆன்றவிந்த சான்றோர்க்கும் சொன்னால் விளங்காத துய்ப்மறை போலுமொழி என்னால் மறக்க இயலுவதோ? அம்மொழியைக் கேட்காத காதென்ன காதோ? திருமுகத்தைப் பார்க்காத கண்ணாற் பயனுண்டோ? அம்மகவு கால்நலிந்து தள்ளாடக் கைகள் அசைந்தாட மேல்நடத் தென்னருகில் மெல்ல வரும்போது யார்நடம் ஒப்பாகும்? ஒர்நடமும் ஒப்பில்லை; சீர்நடையன் என்தோளைச் செங்கையாற் றீண்டுங்காற் சொல்லரிய இன்பமெனைச் சூழ்ந்துவரும்; தோள்பற்றி மெல்லிதழாற் கன்னத்தின் மேற்பதித்த முத்திரைகள் அப்பப்பா பேரின்பம்! அன்றைக் கவள்தந்ததுஒப்பப்பா என்றால் ஒருநாளும் ஒவ்வாதே; இவ்வண்ணம் யான்கண்ட இன்பமெலாம் ஏடெடுத்துக் கைவண்ணங் காட்டிக் கவிபுனைந்தே இன்புற்றேன்; ஆனாலும் என்மனத்தே ஆர்வம் அடங்கவிலை