பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழனா? இந்தியனா? எடுப்பு இந்தியன் என்றொரு தமிழ்மகன் சொன்னால் அவன்தான் இங்கே ஏமாளி-கூத்தன் இயக்கிட இயங்கும் கோமாளி -இந்தியன் தொடுப்பு உந்திய உணர்வால் தமிழனென் றேதனை - உரைப்போன் மானம் உயர்ந்துள திறனாளி-இந்தியன் முடிப்பு அவனே இந்தியத் தமிழனென் றிசைத்தால் அடிமையென் றெழுதிய முறியாளி புவியிசைத் தமிழு இந்தியன் என்றே புகல்பவன் சரிநிகர் சமனாளி இந்தியன் எப்பெயர் சூடுதல் ஒப்புமென் றாய்ந்தே ஏற்றிட முனைபவன் பொறுப்பாளி எப்பொருள் கூறினும் எவ்வெவர் கூறினும் மெய்ப்பொருள் காண்பவன் அறிவாளி-இந்தியன். --" 7.5.1987 -