பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் , G77) கவியரசர் முடியரசன் உறவினர்க்கும் உழைக்கின்ற தொழில்வல் லார்க்கும் உற்றவர்க்கும் மற்றவர்க்கும் பகிர்ந்து பொங்கல் உறவளித்தோம் மகிழ்ந்தளித்தோம்; பின்னர் அந்த ஒண்டொடியை அருகழைத்தேன்; யாழ்ெடுத்து # நறவெனக்கிங் கூட்டுதற்கு மீட்டு கென்றேன் நங்கையவள் யாழெடுத்தங் கமர்ந்தாள் என்முன் நிறம்வெளுத்த தாமரையாள் உருவைச் சான்றோர் நிகழ்த்தியநற் கற்பனையை நேரிற் கண்டேன் இடப்புறத்தே யாழ் சாய்த்துத் தாங்குங் காட்சி எழிலைத்தான் என்னென்பேன்; விரைந்து சென்று இடக்கையின் விரல்நான்கும் நடனம் ஆடி ஏழிசையின் வகைமிழுற்றும் திறந்தான் என்னே! படக்கிடந்த யாழ்நரம்பைத் தெறிப்ப தற்குப் படரும்வலக் கைவிரலின் நளினம் என்னே! தொடக்கிடுமவ் விசைக்கேற்ப அவள்மு கத்தில் ' தோன்றிவரும் மெய்ப்பாட்டின் வகைதான் என்னே! மீட்டியநல் யாழிசையைக் கேட்டு மைந்தன் மெய்ம்மறந்தென் மடியமர்ந்து சிலைபோல் தோன்ற, ஊட்டியநற் சுவ்ைமறந்து செயல்ம றந்தே உலகினையும் மறந்திருந்தேன்; யாழின் ஒசை காட்டியஒர் உலகினில்நான் மிதந்து வந்தேன்; கனவுலகம் நனவுலகம் அறிய கில்லேன்; பாட்டிசைக்கு மயங்காத மாந்த ருண்டோ? படைத்தசெவிப் பொறிப்பயனைப் பெற்றேன் பெற்றேன்.