பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ു. கவியரசர் முடியரசண் நறுக்கிய கருப்பு மீசை நரிக்குண மாக்கள் வாலை நறுக்கிடும் தோற்றம் காட்டும் நற்றமிழ் மாந்தர் வாழ்வில் குறுக்கிடும் பகைமை யெல்லாம் குலைநடுங் கிடவே செய்யும்; முறுக்கிய நரம்பில் நல்ல முத்தமிழ்க்குருதி பாய்ச்சும். சொல்லிலே தேனும் உண்டு; சுடர்விடு கனலும் உண்டு; மெல்லவே தென்றல் பேசும்; மீறிய புயலும் வீசும்; நல்லமென் குயிலும் கூவும் நடுவினிற் புலியும் பாயும்; வல்லமை தமிழர்க் கிங்கே வழங்கிடும் உணர்ச்சிப் பாடல். தமிழ்மொழி தழைக்க வேண்டின் தமிழினம் நிமிர வேண்டின் அமிழ்தெனப் பாட்டு வேந்தன் ஆக்கிய பாடல் முற்றும் தமிழரின் நெஞ்ச மெல்லாம் தனியர சாட்சி செய்து கமழ்ந்திட வேண்டு மிங்கே களிநடம் புரிய வேண்டும்