பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—17.

மொழியின் பகையும் முதலா ளியமும் நமக்கிரு பகைகளடா. தொழிலா ளியத்தின் தோழமை யாலே பகைத்தோல் உரித்திடுவோம்,

மொழியை அழித்துக் கலையைச் சிதைத்தல் முதலா ளியமாகும். விழியை இழந்து விலாவை இழந்து வாழ்வதும் வாழ்வாமோ?

முதலா ளியத்தை அழித்தால் அல்லது மொழியும் வாழாது. முதலா ளியத்தை முரித்தால் அல்லது வாழ்க்கையும் சிறக்காதே.

21