பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

புதியதோர் உலகு செய்வோம்

பகைவன் அழியவில்லை; நண்பனானான். ஆகஸ்டில் சுதந்தரம் பெற்றபோது, நாட்டுப் பிரிவினை நடப்புகள் அண்ணலைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தன. அப்போது, மவுண்ட்பேட்டன் துரை, எலிசபெத் அரசியின் திருமண அழைப்பிதழை, காந்தியிடம் அளித்தார். அண்ணல் மனமுவந்து, “நான் ஒரு பரிசளிக்க விரும்புகிறேன் கொண்டு சேர்ப்பீர்களா?..” என்றார். “இந்த ஏழைப் பக்கிரியிடம் அரசியாரின் மணவிழாவுக்குப் பரிசு கொடுக்க என்ன இருக்கும் என்று பார்க்கிறீர்களா?” என்று நகைத்தார்.

அவர் கையால் நூற்று இரட்டை இழை முறுக்கால் உறுதி செய்யப்பட்ட நூலைக் கொண்டு ஒரு பஞ்சாபிச் சிறுமியினால் குரோஷே ஊசியினால் பின்னப்பட்ட அற்புதமான சால்வை அது. மிக உயரிய பரிசுப் பொருட்களுக்கிடையே, அந்தப் பூச்சால்வையைப் பார்த்த அரசியும், மணாளரும் மனம் உருகிப் பாராட்டி, வியந்து, நன்றிக் கடிதம் எழுதினார்களாம். ‘இதை நான் எந்தப் பொது விழாவுக்கும் எடுக்கமாட்டேன். நெஞ்சோடு வைத்துப் பாதுகாக்கும் மிக உயர்ந்த பரிசாகக் கருதுகிறேன். அன்பின் அடையாளமாக வைத்திருப்பேன்’ என்று ஒரு தடவை மட்டுமல்ல, பல ஆண்டுகள் சென்ற பின்னரும் குறிப்பிட்டாராம்.

அந்த மனிதப் பண்பு, அன்று எப்படிப் பூத்தது?

கத்தியின்றி இரத்தமின்றி இந்த ஒரு சாதனையைச் சாதிக்கச் செய்த அன்றைய இந்திய மக்களிடையே எழுதத்தறியாமை, வறுமை, மூடநம்பிக்கைகள் எல்லாம் இருந்தன. ஆனால் மனித நாகரிகத்தின் அடையாளம், வன்முறை கிளர்த்தும் உணர்ச்சிகளை அடக்கி, உள்வலியைப் பெருக்குவதுதான். அதற்குத் தன்னலம் கருதாது, எளிய வாழ்வில் மேன்மை கண்டு, உடலுழைப்