பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

65

குடும்பத்தார் இந்த நண்பரிடம் சமாதானம் செய்யச் செய்தி விடுத்தனர். இவரையும் அந்தத் தோல்வி பாதிக்காமல் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் அசீரண உபாதைகளினால் துன்பப்பட்டார். இது, தேசப்பற்றா? அல்லது சிந்திக்கும் திறனில்லாத வெறியா?

இன்றைய இளைய சமுதாயம் ஒருபுறம் தொழில் நுட்பங்களில், நிர்வாகத் திறனில், இந்திய நாட்டின் பெருமைக்குரியவர்களாக, எதிர்கால வல்லரசை நிர்ணயிப்பவர்களாக விளங்குவதாக நம்பிக்கை காட்டப்படுகிறது. நடப்பியலில், புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் சாதனைகள், மனிதப்பண்புகளைக் குதறி எறியும் வாணிபங்களாக அசுர வளாச்சி பெற்றிருப்பதுதான் அன்றாட வாழ்வு உணர்த்துகின்றது.

மனிதம் உய்வதற்கான சேவைத் தொழில்கள் அனைத்தும் ‘ஆன்மிகம்’ உள்பட வாணிபமயமாகி விட்டன.

இந்நாள் கண்களை மூடிக் கொண்டு போட்டிப் பந்தய விறுவிறுப்புடன் பணம், பணம் என்று பயணித்து வந்த சமுதாயம், சிந்திக்கத் தொடங்கும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. ஏனெனில், இந்த இலக்கில்லாப் பயணத்தின் வெறுமை புரிகிறது, இன்று.

ஒரு வள்ளியம்மை, மகத்தான சக்திக்கான ஆற்றல் தந்தாள். அந்த நிலையில் இருந்து, நாட்டு விடுதலையோடு, இந்தியப் பொருளாதாரம், பண்பாடு, மனித வளம் என்ற இலக்கில் ஆயிரங்களில் ஒருவராக அந்நாளைய துர்காபாய் ஒரு முன்னுதாரணமானார். ஆனால், இந்திய ஜன நாயகத்தில் பிறகு சூழ்ந்த தவறான முன்னுதாரணங்கள், கல்விக்கூடங்கள், உடல் கவர்ச்சி, பாலியல் உணர்வுகளைக் கட்டவிழ்த்து, வாணிபம் செய்யும் கூடங்கள் என்ற

பு.உ - 5