பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

71

உணர்வு இருக்கும். சாகும் வரை வாட்டி வதைக்கும். ஆனால் அறுபதாண்டு காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. சினிமா, தொலைக்காட்சிப் பரிமாணங்களுடன் மிகப் பெரிய வாணிபச் சந்தையைக் கடை விரிக்கிறது. பழைய குற்றஉணர்வுகளுக்கு இடமே இல்லை. இப்போதைய தொழில் நுட்ப ஜகஜ்ஜாலப் புரட்டுக் கலாசாரக் கவர்ச்சிக்கு மூலதனமே பெண் உடல்தான். விளம்பர முகவரிகளோடும் இல்லாமலும் கவர்ச்சிகள் பஞ்சமில்லாமல் காத்திருக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் பிழைக்க வழியில்லாமல் வறுமை துடைக்கத் தொழிலுக்கு வரவேண்டிய கட்டாயம் இருப்பதாக இன்று சொல்வதில்லை. ஏனெனில் பொறியியல் பட்டதாரி, கணினி மென்பொருள் நுட்பக்காரி எல்லோருமே இந்த நாபி கலாசாரத்தை ஏற்று நடிக்க வருகிறார்கள். வந்து மின்னி உயர்ந்த வேகத்தில் காணாமலும் போகிறார்கள். இன்றைய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பழமை வாய்ந்த நாளேடுகள், வார மாத இதழ்கள் முக்காலும் சினிமா, தொலைக்காட்சி நடிகர், நடிகையர், சீரழிந்த அரசியல் சமாசாரங்களை வைத்துப் பிழைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்திலும் மக்களுக்குத் தரமான தேவையான செய்திகளையும் தருகிறார்கள் என்பதுதான் ஆறுதல்.

சில நாட்களுக்கு முன் இப்படி ஒரு செய்தி வெளியாயிற்று. விபசாரத் தடைச் சட்டத்தில் ஒரு சினிமா நடிகையும் அவள் தாயும் (ஆண் கூட்டாளி அல்ல) கைது செய்யப்பட்டதையும் பிறகு விடுதலை பெற்றதையும் (தலை போகிற, போன) செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.

இப்போதெல்லாம் காவல்துறையில் உயர் அதிகாரிகளிடம் இருந்து எல்லா நிலைகளிலும் பெண்கள்