பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

புதியதோர் உலகு செய்வோம்

ஆனால் ஒர் ஆண் தன் உழைப்பால் குடும்பப் பொருளாதாரச் சுமையை ஏற்று, அவர்களை வாழவைக்க வேண்டும் என்ற கடமை மட்டும், அவன் வசதிப்படி காற்றோடு விட்டுவிடலாம். சம்பாதித்ததைக் குடித்து அழிக்கலாம்; பெண் சுகம் தேடி பெண்ணின் மானம் அழிக்கலாம். அப்படி ஒரு தொழிலை ஆதரித்து, அவளை இழிகுழியில் தள்ளலாம். கட்டிய மனைவியை உதைத்து இம்சை செய்யலாம். பெற்ற குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைக்கலாம்; அல்லது விலைக்கு விற்கலாம்...

பெண், இந்நாள் பொருளாதரத் தற்காப்புக்காகவும் உழைக்கிறாள். பிள்ளைகள் படிப்புக்கும் அவளே உத்தரவாதம் ஏற்க வேண்டியதாகிறது. அவள் ஈட்டும் பொருளில், நுகர்பொருள் வாணிப அசுரன் மடிபிடித்துக் கொள்ளை அடிக்கிறான்.

அவள் உடலும் உள்ளமும் சோர்ந்து நொந்து நூலாகத் துவண்டாலும் நியாயங்கள் அவன் பக்கமே பேசபடுகின்றன.

“அவெ என்ன செய்யிவா, பாவம். வேல சரியாகக் கெடக்கல. புருச வாரப்ப முகம் காட்டாம சோறு போடுறாளா? சதா குடிக்கப் போறா குடிக்காத ஆம்புள எவ இருக்கா?..” என்று மூத்த தலைமுறைகள், வித்தாரம் பேசும். மனசுக்குள் இவள் புருசன் குடித்துவிட்டு வந்து உதைத்த நினைவு முட்டும். ‘அவளும் படட்டுமே?’ என்றுதான் நினைக்கிறாள்.

பெண் சமுதாயத்தின் பலவீனமே இவ்வாறு ஒருவரையொருவர் குதறிக் கொள்வதில்தான் நாளொரு வண்ணமும், பொழுதொரு வசைச் சொல்லுமாக நிலைபெற்றிருக்கிறது. அடித்தளத்திலிருந்து உயர்மாடி