பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

81

வரையிலும் இதில் வேற்றுமை இல்லை. எனவே ஆள்பவனின் மிருகபலம் அகிம்சையை நோக்கிப் பரிணாமம் பெறும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது. பாலியல் வன்முறைகளும் வரதட்சணைக் கொலைகளும் உயர்கல்விக்கும், வண்மைக்கும் எந்த ஒரு சமுதாயப் பரிணாம உயர்வும் வந்துவிடவில்லை என்றே காட்டுகின்றன. கல்விச்சாலைகளில் அதிகார உயர்பீடங்களில் நாம் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறோம். அதுவும் சமுதாய ஒழுங்கைக் காக்கும் காவல்துறை ஆள் வன்முறைக்கு எடுத்துக்காட்டான பிம்பமாகப் படிந்து போயிருக்கிறான், இருக்கிறாள் என்றும் சொல்லாம். இதற்குக் காரணம், தொலைக்காட்சிகளில் அன்றாடம் விவரிக்கப்படும் காட்சிகளாகவும் இருக்கலாம். முந்நாட்களில் தாயார், “அதோ போலீசுக்காரன் வரான், அடம் புடிக்காம சாப்பிடு” என்று பயம் காட்டுவார்கள். அந்தத் தாயே போலீசை அறிந்திருக்கமாட்டாள். ‘பூச்சாண்டி’ என்ற சொல்லைப் போல் அச்சுறுத்தும் சொல்தான் அது. ஆனால் பூச்சாண்டி பயம் விலகி பூச்சாண்டிகளை நேர் கொள்ளும் நிலைக்கு இந்நாளைய மக்கள் தள்ளிவிடப் பட்டிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத்தில், அவர்கள் காவலர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ‘குண்டாந்தடி அடக்கு’க் காவலர்களாகவே திகழ்கிறார்கள்.

தண்ணீரிலிருந்து எங்கோ திசை மாறிவிட்டேனா?

இல்லை.

இந்நாட்களில் சென்னை மாநகர வீதிகளில் சாலைகளில் குடிநீர் லாரிகள் ஒருவகை யமதூதர்களாகத் தங்களை மெய்ப்படுத்திக் கொண்டாலும் பெண்களுக்கு உயிர்நாடிகள், உயிர் காக்கும் தெய்வங்கள். இந்த நெடுநகரில்

பு.உ - 6