பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

93

அடிபட்டுப் போகிறது. மீறும்போது, பிள்ளைக்கு உடம்பு சுடும்; தலைவலி, வாந்தி, கவனக்கோளாறு எல்லாம் சேரும். அப்போது அலறிப் புடைத்து மருத்துவரிடம் கொண்டு செல்வார்கள். பரிசோதனைகள், மருந்துகள், ஃபீஸ் என அது தனிக் கொள்ளை.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வளரும் பிள்ளைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அரசுப் பள்ளிகள் தனி ரகம். இந்தக் குடும்பங்களில் பிஞ்சுகள் விளைந்து பலன் கொடுப்பது அபூர்வம். இப்போதெல்லாம் இந்த இடங்களில் இருந்து, ஐ.ஏ.எஸ், கைவினையாளர் என்று பத்திரிகைகளில் பிரபலமாகுமளவுக்கு வருகிறார்கள். என்றாலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அரைகுறை வளர்ச்சியை எட்டு முன்பே ‘டிராப் அவுட்’ என்ற கணக்கைப் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொன்விழாக் கண்டுவிட்ட இந்தக் குடியாட்சியின் குழந்தைகளையும் நடப்பியலையும் பார்க்கும்போது, முந்நாள் சோவியத் நாட்டில் நான் கண்ட குழந்தைக் காப்பகங்கள், மழலைப் பள்ளிகளைப் பற்றிய நினைவு வருகிறது. 1976, 1979, 1983 என்று மூன்று முறைகள் நான் சென்றபோது, ‘குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்’ என்ற வாசகம் எங்கு திரும்பினாலும் கவர்ந்தது. குழந்தைகள் ஆண்டில் இந்த வாசகம், மிக அதிகமாக ஒடும் ஊர்திகளிலும்கூட இருந்தன. இங்கேயும் இத்தகைய வாசகங்களுக்குப் பஞ்சமில்லை. “பெண்ணுக்குத் திருமண வயது 21” என்று எழுதப்பட்ட ஆட்டோ வாகனத்தை ஒட்டுபவனுக்கு 20 வயது இருக்காது. அவன் ஒரு 15 வயதுப் பெண்ணை மணந்து ஒரு மகவுக்குத் தாயாக்கியும் இருப்பான். இங்கு நடப்பியல் வேறு; எழுத்து வாசகங்கள் வேறு. நான் சென்ற ஒவ்வொரு தடவையும் அங்கே, பல இடங்களில் பல