பக்கம்:புதிய ஆத்திசூடி.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய ஆத்திசூடி

காப்பு

பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத்திருக்கு முழுவெண் மேனியான்,
கருநிறங் கொண்டுபாற் கடல் மிசைக் கிடப்போன்,
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே யுணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறு மறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.