பக்கம்:புதிய ஆத்திசூடி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீழோர்க்கஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலுந் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று.
கொடுமையை யெதிர்த்துநில்.
கோல்கைக் கொண்டுவவாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள்.
சாவதற் கஞ்சேல்.
சிதையா நெஞ்சுகொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக் கிளைத்திடேல்.
சூரரைப் போற்று.
செய்வது துணிந்து செய்.