பக்கம்:புதிய ஆத்திசூடி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்துசொல்.
சோதிடந் தனை யிகழ்.
சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வ தருளின்.
ஞேயங் காத்தல்செய்.
தன்மை யிழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க் கஞ்சேல்.
துன்ப மறந்திடு.
தூற்றுத லொழி.