பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடை நிலை நாட்டுக் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் நடை பெற்று வருகின்றன எனக் கண்டோம். அவற்றுள் ஒன்று -முக்கியமானது- 10 + 2 + 3'என்ற அடிப்படையில் அமையும் கல்வி முறை. ஆரம்பப் டாட்சாலை தொடங்கிக் க்ல்லூரி வரையில் பயிலும் பலரும் மேற்கொள்ள வேண்டிய பாடத்திட்டத்தின் அமைப்பே அது. கல்வி, வெறும் ஏட்டுக் கல்வியாக அமைந்து, மனிதனை இயந்திர மாக்கப் பயன்படும் கிலேயே இங்ாள் வரை அமைந் துள்ளது. அட கெடுவா பலதொழிலும் இருக்கக் கல்வி அதிகமெனக் கற்றுவிட்டோம் என்று கவலக் கூடிய வகையில் இன்றைய காட்டுக் கல்வி அமைந்துள்ளது. இத் தகைய கல்வி முறையில் தனி மனிதனும் சமுதாயமும் வாட்டத்தில் உள்ளமை அறிவோம். எனவேதான் நாட்டு நல்லவர்கள் இக்கல்வி முறையில் மாற்றம் காண விரும் பினர். ஏறக்குறைய அரை நூற்ருண்டுக்கு மேலாக -உரிமை பெறுவதற்கு முன்னும் பின்னும் - நல்லவர் முயன்ற முயற்சிகளின் பயன் தற்போது தெரியத் தொடங்குகின்றது. எனினும் அதற்கும் சுயநல வாதி களின் முட்டுக் கட்டை அடிக்கடி இருக்கிறது. ஆனல் இந்திய அரசாங்கம் முயன்று தன் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளமை கண் கூடு. 6