பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi பயன் வினையும் என்பது கொள்கையாக உள்ளது என எண்ணுகிறேன். இவ்வாறு பிறநாடுகளெல்லாம் முன்னேற்றம் காணும் கிலேயினேக் கண்ட நம் பாரத அரசாங்கம் விரைந்து தொழிற்படத் தொடங்கி இந்தப் புதிய பாடத் திட்டத் தினச் செயலாக்கத் தொடங்கியுள்ளமை வரவேற்கத் தக்கதாகும். நம் தமிழகத்திலும் இந்தப் புதிய முறை ஏற்கெனவே கீழ் வகுப்புக்களில் செயலாக்கப் பெற்று விட்டது. இன்று ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர் 1978-ல் புதிய முறைப்படி 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்றுப் புதிய இரண்டாண்டு இடைநிலை வகுப்பில் சேர்க்கப் பெறுவர். அதற்கென அமைந்த ஆக்கப் பணிகள் விரைந்து: செயல்படுவதறிய மகிழ வேண்டியுள்ளது. இப்புதிய முறையால் பல பிரச்சினைகள் உருவாகும்: எனச் சிலர் அஞ்சுவது குறித்து ஆங்கிலக் கட்டுரைகள் விளக்கி, அவற்றிற்குத் தீர்வு காணும் முறைகளையும், சில அடிப்படை அற்றவை என்ற தன்மையினையும் நன்கு காட்டி யுள்ளன. நானும் ஆங்காங்கே அவற்றின் தன்மைகளைச் சுட்டி, அவை எவ்வாறு தவிர்க்கப் பெறலாம் என்பதை விளக்கியுள்ளேன். நான் என் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளபடி தற்போதுள்ள சில மாநிலப் பாடத். திட்டங்கள், மத்திய பாடத்திட்டங்கள் ஆகியவை உண் மையில் பயன் தரவேண்டுமாயின் இன்னும் மாற்றி" அமைக்கப் பெற வேண்டுவனவாகும். வெறும் 11 + 1 + 3. என்ற எண்ணிக்கை 10 + 2 + 3 என்ற எண்ணிக்கையாக மாறி, வெறும் ஏட்டுப் படிப்புக் கூடங்களாகப் பள்ளி' களும் கல்லூரிகளும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு உயர் பள்ளியும் ஒ வ் வொரு தொழிற்சாலையுடன் இணைக்கப் பெறல் வேண்டும். நாட்டுத் தொழி: