பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χίν என்ருே வேறு காரணத்தாலோ எழுதவில்லை. இந்த முறையின் அடிப்படை நம்நாட்டுக்குப் பழமையான தென் பதையும் பயன்தரத் தக்க தென்பதையும் சுட்டிக் காட் டியுள்ளேன். இந்நூல் பற்றிய கருத்தைச் சொல்லிய போது இதை விரைவில் வெளிக் கொணரவேண்டும் என என்ன்ை ஊக்கி முன்னுரை அளித்த தமிழ்நாடு கல்வித் துறைச் செயலர் திரு. C G. Rangabashyam அவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குகர் திரு Dr. H. S.S. Lawrence அவர்களுக்கும் தில்லி மத்திய கல்விக் குழுவின் தலைவர் திரு Dr. G. L. Bakhshi அவர்களுக்கும் நான் நன்றி. கூறக் கடமைப்பட்டவனுகின்றேன். இந் நூல் ஓரளவு புதிய கல்வி முறையினைப்பற்றி அறிய உதவும் என நம்புகிறேன். இம்முறை நம் மாநிலத்தில் செயல்படத் தொடங்குமுன் இது பற்றி அரசாங்கமும் பல வெளியீடுகளை வெளியிடலாம். நானும் பின்னர் இயலுமேல்வாய்ப்பு நேருமானல் - இது பற்றி இன்னும் விளக்கமாக எழுதலாம் எனக் கருதுகிறேன். இந்நூல் வெளிவரக்காரணமாயிருந்த அனைவருக்கும் நன்றிகூறி இந்நூலைத் தமிழ் மக்கள் முன் வைக்கிறேன். இதில் - என் கட்டுரைகளில் உள்ள பல கருத்துக்கள் என் உள்ளத்து எழுந்தவை. இவை காலத்தால் ஏற்றுக் கொள்ளப் பெறும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் வணக்கமும் நன்றியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பணிவுள்ள, சென்னை.30 } 31 – 12–76 அ. மு. பரமசிவானந்தம்,