பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல மாகி இன்றி யமையாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே' (நன்னூல்) எனப் பூவின் இலக்கணம் கூறி அதனை கல்லாசிரியருக்கு உவமித்தார் பவணந்தி. அது கல்லாசிரியருக்கு மட்டுமன்றி நல்ல கல்விக்கும் பொருந்திய உவமையாகின்றது. ஆம்! கல்வியாகிய மலர் மக்கள் வாழ்வின் மங்கலப்பொருளாகி - சமுதாயத்துக்கு இன்றி யமையாத ஒன்ருகி - எல்லாருக்கும் இன்பம் அளிக்கும் நிலையில் அமைந்து-அவ்வக்காலச் குழலுக்கும் நிலக்கும் ஏற்ற கருத்துக்களுடன் வன்மை நீங்கி மென்மை காட்டி, தானும் மலர்ந்து மக்கள் அகமும் முகமும் மலர அவர் கள் வாழ்வையும் மலர வைப்பதாகும். A Good Education is one that enables you to understand life and society better.