பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தேர்வு தாண்டியதும் அனைத்தையும் மறந்து விடுவதன்று. வெறும் 100 க்கு 100 வாங்கும் மனப்பாட அறிவுகோலன்று கல்வி. கல்வி என்ற சொல் அந்த அளவில் பொருள் தருவதாகாது. கல்வி என்பதைக் காட்ட வந்த வள்ளுவர். அதை வாழும் உயிர்க்குக் கண் என்கின்ருர். ஒருவருக்கு உலகில் உலவக் கண் எப்படி அவசியமோ, அதுபோன்றே கல்வி அவசியமாகின்றது. மற்றவர் துணையின்றிக் குருடன் வாழ முடியாது மற்றவர் துணையின்றி உலகில் கண்ணு டையார் தாமே தனித்து இயங்க வல்லவர்தாமே. ஆமாம்! கல்வியும் அவ்வாறே (குறள் கல்வி 2&3) தன்னைச் சேர்ந்த மனிதனை, மற்றவர் துணை இன்றித் தானே இயங்க வைப்பது. அவன் வாழ்வை அக்கல்வி வளமாக்குவதாகும். அது மட்டுமன்று அவன் கல்வி அவனை எங்கே சென்ருலும் - எந்தநாட்டில் இருந்தாலும் வாழவைப்பது (குறள் கல்வி:7) அதற்கும் மேலாக அவனே எழுமையும் வாழவைப்பது. எழுமை என்பதன் பொருளையும் இங்கே ஆராயவேண்டா. எனினும் அக்கல்வி ஒன்றுக்கு மேலாய எண்ணற்ற பல நன்மைகளைப் பயக்கும் தன்மை உடையது எனக் கொள்ளலாம். ஒரிடத்தில் அவன் கற்ற கல்வி, அவன் செல்லுமிடத்திலெல்லாம் - எழுமிடத்திலெல்லாம் அவனே வாழவைப்பதாகும். (குறள். கல்வி. 8). இவற்றின் அடிப் படைகளிலெல்லாம் இன்றைய கல்வியை எண்ணிப்பார்க்கின் உண்மை விளங்கும். இன்றைய கல்வி இவற்றையெல்லாம் தருவதாயின் காட்டில் வேலைஇல்லாத் திண்டாட்டம் எழக் கார்ணம் இல்லையே - மக்கள் பட்டம் வேண்டாம்; சோறுபோடு, வேலைகொடு என்று பட்ட மளிப்பு விழாவில் கொடிதுக்கிக் கூக்குரலிடத் தேவையில்லையே. எனவே இன்றைய கல்வி உண்மையான கல்வி இல்லை என்பதுதானே பொருள். இதை உணர்ந்தே உண்மைக் கல்வியைத் தர இந்திய அரசாங்கம் முயல்கிறது.