பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எந்த வேலையும் செய்யத் தயாராக உள்ளனர். பாரதியின் அடியினேயே இவர்கள் முன்னர் வைப்போம். பயன்? கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார் அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார் வணிகமும் பொருள் நூலும் பித்ற்றுவார் வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் துணியும் ஆயிரம் சாத்திரம் கற்கினும் சொல்லுவார் எட்டுணப் பயன் கண்டிலார்' என்று அவர் பாடும்போது, அக்காலத்தில் தொழில் அனுபவம் (work experience) இல்லாத கல்விகிலே கண்டு. எவ்வளவு ஏங்கியுள்ளார் என்பதை அறியமுடிகின்ற தன்ருே' படித்ததைப் பிதற்றுவார்' என்று அவர் கூறவேண்டுமானல் அவர் உள்ளம் எவ்வளவு கைந்திருக்கும். ஆனல் இன்றும் அந்த நிலை - அவலம் - மாறவில்லையே. ஒரு வேளை அவர் திரும்பி வந்து காண்பாராயின் இப்படிச் சீர் கெடவா நம் பாரத நாடு சுதந்திரம் அடையப் பாடுபட்டேன் - பாட் டிசைத்தேன் என்று கைந்து போகமாட்டாரா? ஆம்! இந்த அவல நிலையைப் போக்கவே இன்று அனைத்திந்திய அடிப் படையில் கல்வியில் பெருஞ் சீர்திருத்தம் காண இந்திய அரசாங்கத்தார் முயல்கின்றனர். பாரதியார், உயர்ந்த இலக்கியம் படிப்பதோடு - ஏன்? - படைப்பதோடு உடன் தொடர்ந்தே பல்வேறு கலைத் தொழில்களேயும் காட்டுக்கு வேண்டிய நல்ல தொழில் களையும் - தேவையாயின் உலகத்தொழில் அனைத்தையும் செய்வோம் என்று பாடுகிருர்.