பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்' என்று எக்காளமிட்டுப் பாடுகிரு.ர். அந்த விடுதலைக் கவிஞன் விழைவையே இன்று இந்தியா செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. . ஆங்கிலேயர்தம் கல்வியினல் பலனில்லை என்பதைக் கண்ட பாரதியார், புதியதோர் உலகு சமைக்கக் கிளர்ங். தெழுந்து, அவ்வுலகில் - காட்டில் கல்வி, கைத்தொழிலோடு இயைந்து செல்ல வேண்டிய இன்றியமையாமையைப் பல பாடல்களில் விளக்கிக் காட்டுகின்ருரே. படித்தவர் தொழிலிடைப் புகுந்து புதுமை விளேக்கும் செயல் திறனைப் பாரதியார் பல படப் பாடியுள்ளாரே. அந்தச் செயல் திறன் எப்போது முகிழ்க்கும்? ஆம் படிக்கும் காலத்திலேயே அத்தகைய நல்ல பயிற்சிகளைப் பெறல் வேண்டும் - அர சாங்கம் தர வேண்டும். உரிமை பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரே இந்தப் பாதையில் அரசாங்கம் கருத்திருத்துகின்றது. தொடக்க நாளிலேயே இந்த அடிப் படையை ஆராய்ந்து செயல் பட்டிருப்பின் காட்டில் எத் தனையோ கொடுமைகளே நாம் கண்டிருக்க மாட்டோம். தற்போது இத்துறையில் கருத்திருத்தியமைக்கு அரசாங் கத்துக்கு நன்றி செலுத்துவோமாக. w கல்வி எப்படி அமைய வேண்டும். 1947-ல், உரிமை இந்தியா,கல்வி நெறியில் எந்த வகையில்: செயலாற்ற வேண்டும் என நான் கனவுகண்டேன். அந்தக் கனவின் பயனக நான் எழுதிய நூலே இந்திய முதற். சட்டம்' என்பது. அதில் வெறும் ஏட்டுப் படிப்பினல்