பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பயனில்லையென்றும், அது தொழிற் கல்வியோடு தொடர்பு கொண்டாலன்றிச் சிறக்காது என்றும், அத்துடன் சமு தாயத் தொண்டும் இடம் பெற்ருல்தான் பட்டப்படிப்பு நிறைவுற்றதாகும் என்றும் விளக்கி, அதை ஒரு நாடக .மாகவே ஆக்கித் தந்தேன். பல பள்ளிகள் அங்காடகத்தை நடித்தன. அன்றைய தமிழகப் பொதுப் பணி அமைச் .சராக இருந்த உயர்திரு மீ பக்தவத்சலம் அவர்கள் அதைப் பாராட்டி நல்லதொரு முன்னுரையும் தந்தனர். ஆயினும் அந்த நாடகம் 'நாடக அளவிலேயே கின்று விட்டது. நாட்டில் அக்கொள்கையை யாரும் ஆதரிக்க வில்லை; அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் இத்தனை ஆண்டுகள் கழித்தாயினும் அத்தொழில் கல்வியும் சமுதாயத் தொண்டும் கல்வியோடு இணைக்கப் பெறுவ தறிந்து மகிழ்கின்றேன். தற்போது பட்டப் படிப்பு முடித்த .பின் கிராமத் தொண்டும் பட்டம் பெறச் சேர்க்கப் பெறு கின்றது மகிழ்ச்சிக்குரியது. என் நாடகத்தின் அடிப் படையே (1947-ல் எழுதியது) அது தான். இன்று இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் கல்வி முறை அமைந்துள்ளது. கல்வி மாசில ஆட்சிக்கு உட்பட்ட பொருளாக அமைகின்ற மையின் ஒவ்வொரு மாநிலமும் தத்தமக்கெனத் தனியாகக் கல்விக் கொள்கையை அமைத்துக் கொள்கிறது. இந்திய நாட்டு ஒருமைப் பாட்டுக்கு இந்த கிலே உகந்ததாகாது. ஏன் இதுவும் மத்திய அரசாங்கப் பொருளாக மாற்றப் படக் கூடாது? என்பதே பலர் கேள்வி. அனைத்திந்தியா வுக்கும் ஒரே கொள்கை அளவில் - பாடங்கள் அமைப் 1.பதோடு, மொழி பற்றி மட்டும் அவ்வம் மாநில மொழி அடிப்படையில் அமைக்க ஏற்பாடு செய்தால் நலம் பயப்ப காதா? கணக்கோ, அறிவியலோ சமுக நூலோ, வரலாருே. தொழில் பாடமோ, உடற் பயிற்சியோ, வேறு உள்ள பாடங்