பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காட்டில் இப்பள்ளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை ஏட்டும் அளவிற்கு வளரும் என அஞ்சுகிறேன். தமிழ் நாட்டுக் கல்விக் கொள்கையின் மாறுபட்ட தரமே இவை வளர வாய்ப்பினை அளித்தது. இனியாவது இந்த முறை மாற வேண்டும். அண்மைத் திருத்தத்தால் இணைந்த பொறுப்பில் கல்வி விடப்பட்டுள்ளது. தற்போது, மா ற த் த க் க சூழ்கிலே, நல்ல கல்வி நெறியாளரின் கீழ் உருவாவது மகிழ்ச்சிக்குரியது. இன்றேல் கல்வி அனைத்திந்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப் பெற வாய்ப்பு உண்டாகும். மொழிப்பாடத்திலும் ஒன்றை நாம் காண வேண்டும். தமிழ் நாட்டு அரசாங்கம் தமிழுக்கு எந்த ஏற்றமும் இது வரையில் செய்யவில்லை. ஒரே முறை திரு. அவினுசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயமாக்கப் பெற்றது. யாதொரு மாறு பாடோ எதிர்ப்போ இன்றி அன்று நாடு முழுவதும் அதை ஏற்றுக் கொண்டது. ஆயினும் அடுத்து வந்த கல்வி அமைச்சரால் அது இல்லாது, தமிழ்நாட்டில் தமிழ் பிற பதி ன்ைகு அல்லது லத்தின், பிரஞ்சு, ஜெர்மன் மொழிகளோடு ஒன்ருக அமைக்கப் பெறப் பாடதிட்டம் அமைக்கப் பெற்றது. கல்லூரிக் கல்வியும் அந்த வகையிலேயே அமைந்தது. தமிழ் முதல் பகுதி ( l Part) என்று பெயர் பெற்றதே ஒழிய, அது பிற மொழிகளோடு ஒன்ருகவே உள்ளது. ஆங்கிலம் இரண்டாவது இடம் ( Il Part ) பெற்ருலும் அது அனைவராலும் கட்டாயமாகப் படிக்கப் பெறல் வேண்டும். இந்த அவல நில தமிழால் வாழ்ந்து வளர்ந்தவர் என்பார் காலத்திலும் மாறவில்லை. இருந் தமிழே உன்னல் இருந்தேன்' என்று தமிழ் விடுதூது ஆசிரியர் பாடியபடி, தமிழைக் காட்டித் தமிழால் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் கூட, இருந்தமிழே உனக்காக