பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குழந்தைப்பள்ளியிலும் 15வயது வரையில் பள்ளியிலும் பிறகு இரண்டாண்டுகள் இடைகிலே நெறியிலும் பிறகு மூன்ருண்டு கள் கல்லூரியிலும் பயின்று 20 வயதில் சமுதாயத்தில் நுழையத்தக்க தகுதியினையும் வாய்ப்பினையும் பெறவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். ஆரம்பக் கல்வி ஆரம்பக் கல்வி என்பது தனித்த பிரிவாகவே எல்லா மாநிலங்களிலும் இயங்குகின்றது. அதை வளர்க்க அரசாங் கங்கள் பலவகையால் பாடுபடுகின்றன. மதிய உணவு முதல் இலவச நூல் வழங்குவது சருகப் பலவகையில் உதவி செய்ய முன் வருகின்றன. கட்டாயக் கல்விமுறையில் செயலாற்றும் வகையும் ஆராய ப் பெறுகிறது. எனினும், காட்டில் கல்விக் கூடங்கள் வளர்கின்றன என்ருலும், போதிய அளவுபெறும் நிலையோ கல்வியின் தரமோ, அமைப்பு முறையோ நாட்டின் தேவைக்கு ஏற்ப வளரவில்லை என்பது கண்கூடு. ஆரம்பக் கல்வி எப்படி அமையவேண்டும் என்பது பற்றி எத்தனையோ ஆய்வுகள் நடைபெற்றும் அவை செயல்படத் தொடங்க வில்லை. அந்தத் தொடக்க நிலையிலேயே பிள்ளைகள் கல்வியுடன் அவரவர்தம் சூழலுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற வகையில் தொழில் கல்வி முதலியன அமைத்துத் திட்டமாக்கி, அவரவர் சுழலுக்கு ஏற்றவகையில் பாடத் திட்டங்களே அமைக்க வேண்டும். அவற்றைப் பயிற்றுகின்ற ஆசிரியர்கள் அத்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக அமைதல் சிறப் புடைத்து. ஆயினும் இந்த ஆரம்ப வகுப்புகளுக்கு இன்று மாநில முழுவதற்கும் ஒரே வகையான பாடத் திட்டத்தை யமைத்து, ஒரே வகையில் பயிற்சி பெற்ற பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களே உண்டாக்கி, (மேல் வகுப்புகளுக்கு பல பாடங்கள் ஒரே அமைப்பில் இருக்க வேண்டும் எனக்