பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விரும்புவதில்லை. சொந்தமாக நிலம் இருந்து சில ஆட்களே வைத்து வேலை வாங்கும் மிராசுதார் மகனுக இருந்தாலும், அவன் பள்ளியிறுதி வகுப்பு வரையில் படித்து விட்டால், நகரத்தில் எங்கேனும் ஒரு கிடங்கில் எழுத்தாளகைப் பணியாற்றி அடிமை வாழ்வு வாழ்வதிலே நாட்டம் கொள் கிருன். இவ்வாறு ஊரின் பற்று அற்று, உற்றவர் தம் தொடர்பு அற்று, வேறு எங்கோ யாருக்கோ அடிமையாக இருந்து வாழ விரும்பும் நிலைதான், மெல்ல வளர்ந்து, பிறந்த தாய் நாட்டையே விட்டுச் சென்று, வேற்று நாட்டுக்கு அடிமையாகி, தாய் வருந்தி அழைத்தாலும் வாராத தேசத் .துரோக உணர்வை வளர்த்து விடுகின்றது. இன்று எத்தனையோ பேர் தாயகமாம் பாரதத்தை விடுத்து வேற்று நாடுகளில் உரிமை வேண்டி, பிறந்த நாட்டை மறக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்களன்ருே இந்திய அரசாங்கம் எத்தனையோ அழைப்புக்கள் விடுத்தும் கேளாச் செவிடர் களாய்ப் பலர் மிளாத பிறநாட்டு வாழ்வை விரும்பும் கிலைக்கு அவர்களே ஆளாக்கியது நம் நாட்டுக் கல்விமுறைதான் என்று சொல்லுவேன். எனவேதான் கல்வி அடிப்படை .யிலேயே மாற்றம் பெறல் வேண்டும் என வற்புறுத்த விழைகின்றேன். கல்வியொடு தொழிலும் வாணிபமும் கலக்கப் பெற வேண்டும், கல்லூரிகளில் வணிகம் (commerce) இன்று ஒரு பாடமாகப் போதிக்கப் பெறுகின்றதென்ருலும் அதைப் பயிலுகின்ற பலரும் பிற்கால உத்தியோகத்'துக்கெனவே பயில்கின்றனர். ஆனல் அதன் வழியே தம் சொந்தப் பொறுப்பில் வணிக வளனைப் பெருக்கிக் கொள்ளும் திறன் பெறலே அக்கல்வி கற்பதன் நோக்கமாக அமைய வேண்டும். இவ்வணிகக் கல்வி உயர்நிலைப் பள்ளிப் பாடங்களிலே இடம் .ெறல் வேண்டும். நல்லவேளை மத்திய கல்வி நிறுவனத் orir (Central Board of Secondary Education) 6.1600slas இயலே ஒன்பதாம் வகுப்பிலேயே பாடமாக அமைத்துள் வளனர். இதன் சிறப்பினையும் இன்றியமையாமையினையும் தேவையினையும் முறைமையினையும் ஆங்கிலப் பேரகராதி