பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஏற்ற தொழில் வாணிபம் முதலியவற்ருெடு இணைந்த கல்வியினைப் பள்ளியில் பயிலத் தொடங்கில்ை, அவன் பிறகு இடைநிலைக் கல்வியிலும் கல்லூரிக் கல்வியிலும் தன் திறன் காட்டிப் பயிலும் தன்மையினைப் பெறுவதோடு தனக்கேற்ற வாழ்வோடு தொடர்புடைய கல்வியினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சிறக்கக் கற்று உயர வழியுண்டு. இந்த அடிப்படையிலேதான் தற்போது நம் நாட்டுக் கல்வி முறையே மாற்றி அமைக்கப் பெறுகின்றது. கல்வி முறையில் இத்தகைய மாற்றங்கள் ஏன்? அது பற்றி எப்போது யார் கினைத்தார்கள்? என்ற கேள்விகளுக் கெல்லாம் அரசாங்கமும் கல்வி அமைச்சரும் மத்திய கல்விக் குழுத் தலைவரும் செயலரும் பிறரும் அவ்வப்போது விளக்க மாகப் பதில் தந்துள்ளார்கள். 1917-இல் தொடங்கிய மாற்றம் பற்றிய இக்கருத்து, இப்போதுதான் கனியத் தொடங்கியிருக்கிறது என்பது பலருக்கு வியப்பாக இருக் கலாம். சரியாக சஷ்ட அப்தபூர்த்தி எனும் மணி விழாவும் அத்திட்டத்துக்கு அது நடைபெருமலே வந்து விட்டது. எனினும் சிலர் இன்றும் இது கூடாது என வாதிட்டும் வாய்ப்பு இருந்தால் முட்டுக் கட்டையிட்டும் வந்துள்ளனர். இந்திய அரசாங்க உறுதிப்பாட்டினல் அம்முட்டுக் கட்டைகள் தகர்க்கப் பெற, 1978 முதல் இந்தியா முழு. துக்கும் ஒரே வகையான தேவையான - சமுதாய வாழ்வை ஒட்டிய கல்விமுறை செயல்பட வேண்டும் என்று முடிவு: செய்யப் பெற்றுள்ளது. இப்புதுக் கல்வி முறையின் தோற்ற வளர்ச்சி பற்றி இந்திய அரசாங்கக் கல்வி மந்திரி அவர்கள் எழுதிய எழுத்தினேயும் இம்மாற்றத்தின் தேவை. யினையும் இன்றியமையாமையினையும் பற்றி மத்திய கல்விக் குழுத்தலைவர் அவர்தம் எழுத்தினையும் (இரண்டும் ஆங்கிலத்தில்) அப்படியே உடன் இணைத்துள்ளேன்.