பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் வளரும் மனித சமுதாயத்தின் அடிப்படை கல்வியே யாகும், எழுத்து உண்டான நாள் எதுவாயினும், அந்த நாள் தொட்டு மட்டுமன்றி அதற்குப் பலப்பல ஆண்டு களுக்கு முன்பே அவன் கல்வி கற்றவகை வாழ்ந்து வங் திருக்கிருன். எட்டுக் கல்வியும் இலக்கியக் கல்வியும் அவன் வரலாற்றில் எங்கோ பிற்காலத்தில் எழுதப்பட வேண்டியவை. ஆனல் அவன் குழலும் சுற்றுச்சார்பும் இயற்கையும் பிறவும் கல்லாசிரியர்களாக அமைந்து ஆயிர மாயிரம் வருடங்களாக எவ்வளவோ விதமான கல்வியை அவனுக்குக் கற்றுத் தந்துள்ளன. அவற்ருல் அவன் பெற்ற வாழ்க்கைப் பாடமே அவனே மனிதனுக வாழ வைக்கிறது. வெறும் ஏட்டுக் கல்விதான் மனிதனை வாழ வைக் கிறது என்ருே அதுபற்றித்தான் வள்ளுவரோ பிற பெரும் புலவர்களோ கல்வி என்ற தலைப்பில் காட்டிச் சென்ருர்களென்ருே நாம் கருதுவோமாயின் நாம் பெருங் தவறு செய்தவராவோம். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்ற குறள் வழி, சமு தாயத்தைச் சார்ந்த கல்வியே பிற ஏட்டுக் கல்வி முதலிய மற்றவற்றிலும் மேம்பட்டது என்று, அன்றே வள்ளுவர் வரையறுத்துக் காட்டிச் சென்றுள்ளார். எனவே கல்வி'