பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிப் படிப்பு "எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே, இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ' என்ருன் கம்பர். இந்த முறை கல்விக்கு இன்றியமை யாதது எல்லாரும் எல்லாக்கல்வியும் கற்ற்லாலே வல்லாரும் இல்லே அல்லார்களும் இல்லை மாதோ' என்றபடி பள்ளியில் - ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை - எல்லாப் பாடங்களும் எல்லோருக்கும் பயிற்றப் பெறல் வேண்டும். இந்த அமைப்பிலேயே இன்று பாடத் திட்டங்கள் உருவாக்கப் பெறுகின்றன. என்னும் இதில் ஒரு வரையறை அமைத்துக் கொள்ளல் நலம் பயப்பதாகும். மூன்ரும் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவனுக்கு நிலநூல் அடிப்படையில் உலகம் முழுதும் பற்றிய நூலேப் பாடமாக அமைக்கின்றனர். அம் மூன்ரும் வகுப்பில் பயிலும் மாணவனுக்கு, அவனுடைய அடுத்த ஊரின் பெயரும் தன்மையும் தெரியாது. ஆனல் அமெரிக்க நாட்டுத் தலைநகர் பற்றியும் ஜர்மன் காட்டு எல்லே பற்றியும் ஒப்புவிப்பான். எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும் என்பதற்காகப் பிள்ளைகள் கிலே அறியாது எல்லாவிதமான பாடங்களையும் எல்லேயின்றித் திட்டத்தில் சேர்க்கக் கூடாது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அமைந்த நிலநூல் பற்றிய பாடத்திட்டத்தைக் காணின் ஒருவாறு நமக்கு அது வழி