பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 களிலும் மொழியிலும். எனினும் இன்றைய நிலநூல் பாடத்திட்டமும் பிறவும் இந்த அமைப்பில் இல்லை என்பது தெளிவு. வரலாறு அல்லது சமூக நலப் பாடத்திலும் இந்த முறையே அடியிலிருந்து தொடங்கி, அன்றைய ஐக்கிய நாடுகளின் சபை வரையில் சென்றது. கணிதமும் பிற மொழிப் பாடங்களும் அப்படியே. மொழிப் பாடங்களின் அடிப்படைக் கூறுகளாகிய எழுத்துக்களின் அமைப்பினைப் பயிலவரும் மாணவர் உள்ளத்தில் பதிய வைத்து, பிறகு மெல்ல அவ்வெழுத்துக்களாகிய பதம்,வாக்கியம் என்று படிப் படியாகச் செல்லுவார். தெருப் பள்ளிக்கூடங்க ளென்று அன்றிருந்தவற்றில் எழுத்து வடிவ முறையில் பயிற்று வதோடு, முறையம் சொல்லும் முறையான பாட அமைப்பில் விடியுமுன் மாணவர் கூடி, ஆத்தி குடி முதல் சதகம், நிகண்டு வரையிலும் கணக்கில் கீழ்வாய் இலக்கம், பிறவாய் பாடுகள் வரையிலும் முறையாக அறிந்த ஒருவன் முன் சொல்ல, மற்றவர் அனைவரும் வாய்விட்டுச் சொல்லுவர். அவை நாளாவட்டத்தில் அப்படியே மனத்தில் பதிந்துவிடும். இவ்வாறு இருவகையிலும் அன்றைய கல்வி நன்கு வளர்ச்சி யடைந்தது. இம்முறைகளை மீண்டும் புகுத்தினல் பயன் விளையுமா என அறிஞர் எண்ணிப் பார்க்கவேண்டும். இக் காலத்திலும் அறிஞர் சிலர் பள்ளி நேரத்தினை மாற்றி அமைக்க வேண்டுமெனக் கூறிவருகின்றனர்; முறையும் அதுதான். இக்காலத்தில் சிலர் வெறும் மனப்பாடம் செய்தல் வேண்டாத ஒன்று என்பர். சற்றே கின்று நினைத்துப் பார்ப்பின், பொருளன்ற வகையில் கண்டவற்றை மனப் பாடம் செய்வது ஒருவேளை தவறு எனக் கொள்ளப்படினும், சமுதாய நலத்துக்கு ஏற்ற பாடங்களே உளங்கொள