பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மனப்பாடம் செய்தல் தவருகாது. 'ஒருமைக்கண் தான் கற்ற,கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து' என்று வள்ளுவன் இந்த அடிப்படை உணர்வில் தான் சொல்லி யிருக்க வேண்டும். எனவே புதிதாக உருவாகும் பாடத் திட்ட அமைப்பில் படிப்படியாக உயரும் நிலையில் பாடங்களே அமைக்கும் இம்முறையினைக் கையாளல் பொருந்துவதாகும் என்று எண்ணுகிறேன். உரியவர் இந்த முறைகளை எண்ணிப் பார்க்கவேண்டு மெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். மொழிப் பாடங்களைப் பற்றி இங்கே எண்ணிப் பார்த் தல் இன்றியமையாதது. இந்தியா முழுதும் மும்மொழித் திட்டம் செயல்படுகின்றது. தமிழகத்தில் இல்லை என்ருலும், மத்திய கல்விக் குழுவின் ஆணைவழி இயங்கும் பள்ளிகளிலும் இந்திப் பிரசார சபை வழியிலும் இந்தி கட்டாயமாகவும் விருப்பமாகவும் பயிற்றப் பெருகின்றது. தமிழ் காட்டில் தமிழே கட்டாயமாக இல்லாதபோது வேறு எந்த மொழிதான் கட்டாயமாகும்? காட்டுக்கே அங்கிய மொழியாகிய ஆங்கிலம் ஒன்றுதான் கட்டாய மொழியாக உள்ளது. பள்ளியில் இல்லையாயினும் அரசாங்கத் தேர்வு நடத்தும் குழுவின் தேர்வுகளிலும் வேறுபல இடங்களிலும் இந்தி செயல்படுகின்றது. அண்மையில் ஏற்பட்ட அரசியல் அமைப்பு மாற்றத்தில் கல்வி மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் இரண்டின் பொறுப்பிலும் எடுத்துக் கொள்ளப் பெறுகின்றமையின் நாடெங்கும் பொதுமொழி கட்டாய மாக்கப் பெறலாம். இம் மொழிப் பாடம் பற்றி முன்னரே நான் குறித்திருக் கிறேன். ஈண்டுச் சற்றே விரிவாகக் காணலாம் என எண்ணுகிறேன். வட்டார மொழிகளுக்கு முதலிடம் தருதல் வேண்டும். மாராட்டிய மண்டலத்தில் (பம்பாய் மாநிலம்) அனைவரும் பிறமொழிகளோடு மராத்தி பயில