பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வேண்டும் என்று விதி செய்துள்ளனர். ஆயினும் 'தமிழ். தமிழ் என்று கூக்குரலிடும் தமிழ் நாட்டில் அந்த கிலே இல்லை. பள்ளிகளை யார் நடத்திலுைம் அதில் வட்டார மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும். சென்னை நகரில் உள்ள மத்திய அரசு நடத்தும் சில பள்ளிகளில் தமிழ் வாடையே கிடையாது. ஆனலும் இதே மத்திய அரசு மாராட்டிய மாநில விதியினை ஏற்றுக் கொள்ளுகிறது. காட்டில் மொழிக் காழ்ப்பும் மொழி வேறுபாடும் இல்லாது ஒற்றுமை உணர்ச்சி நிலை பெற வேண்டுமானல் வட்டார மொழியும் தேசிய மொழியாகிய இந்தியும் பள்ளிகளில் கட்டாயமாக்கப் பெறல் வேண்டும். பின் ஆங்கிலத்துடன் விரும்புவர் வேறு மொழிகளையும் பயிலலாம். எனவே பள்ளியில் வட்டாரமொழி, காட்டுமொழி, உலகமொழி எனக் கொள்ளத்தக்க வகையில் மும்மொழித் திட்டத்தை என்றும் செயல் படுத்த வேண்டும். பம்பாய் மாநிலத்தில் அவரவர் தம் தாய்மொழியும் சேர்த்து நான்கு மொழிகள் உள்ளன. தமிழ் நாட்டிலோ பள்ளிகளின் திறனைக் குறைக்கும். வகையில் இருமொழிப்பாட முறையே இடைக் காலத்தில் இடம் பெற்றுள்ளது மொழிப் பாடங்களே அமைக்கும்போது வகுப்பின் கிலேக்கு ஏற்பக் கூட்டிக் கொண்டே போகலாம். கர்சரி பள்ளிகளில் இன்று ஆங்கிலமே முக்கிய இடம் வகிக் கின்றது. இது விரும்பத்தக்கதன்று. அந்தப் பிஞ்சு உள்ளங்களில் தாய்மொழிப் பற்று பற்றிப் படர வழி இல்லாது மங்கும்; அதுவே பிறகு தாய் நாட்டுப் பற்றையும் தாய் காட்டுச் சமுதாய உறவையும் இல்லையாகச் செய்யும். பின் அப்பிள்ளைகள் வளரும் போது தம்மை ஒரு தனி இனமாக கினைத்துக் கொள்ளுவதோடு, எங்கேனும் வெளி காடுகளுக்குத் தாவும் முயற்சியில் ஈடுபடும்; பெரும்பாலும் வெற்றியும் பெறலாம். இக் கொடுமைகளெல்லாம் நீங்க,